- Advertisement -
பல குடும்பங்களில் மின்சார கட்டணம் பெரும் சுமையாக மாறியுள்ளது. நமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் மின்சார பயன்பாட்டில் சிறு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தை குறைத்து நமது சேமிப்பை உயர்த்த இது வழிவகுக்கிறது.
வெப்பம் அதிகரிக்கும் இக்காலத்தில், வீட்டு மின்சார கட்டணம் பெரும்பாலான குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. ஆனால் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், மின் கட்டணத்தை கணிசமாக குறைக்கலாம் என மின்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதற்கான முக்கியமான ஏழு வழிமுறைகள் பின்வருமாறு,
- ஏ.சி. வெப்பநிலையை 24–25 டிகிரி செல்சியஸில் வைத்திருங்கள் பலர் ஏ.சி.யை 18 டிகிரி வரை குறைத்து இயக்குவது வழக்கம். இதனால் இயந்திரம் நீண்ட நேரம் இயங்க வேண்டியதால் மின்சார நுகர்வு அதிகரிக்கிறது. 24 அல்லது 25 டிகிரியில் அமைத்தால் அறை போதுமான அளவு குளிர்வதோடு மின்சாரமும் மிச்சமாகும்.
- பழைய மஞ்சள் பல்புகள் எல்.ஈ.டி பல்புகளை விட 10 மடங்கு மின்சாரத்தை பல மடங்கு மின்சாரத்தை விழுங்கக்கூடியது. எனவே உங்கள் வீடுகளில் உள்ள பழைய மஞ்சள் பல்புகளை அகற்றி எல்.ஈ.டி பல்புகளை பொருத்துவது சிறந்தது. மேலும், ஒவ்வொரு அறைக்கும் தேவையான வாட்டேஜ் பல்பை தேர்வு செய்வதால் மின்சார கட்டணத்தை பெருமளவு மிச்சப்படுத்தலாம்.
- டி.வி, மியூசிக் சிஸ்டம், சார்ஜர்கள் போன்றவை சுவிட்ஆப் செய்து ஸ்டேண்ட் பையில் விட்டுவிடுவது பெரும்பாலானவர்களின் வாடிக்கை. அப்படி எலெக்ட்ரானிக் சாதனங்களை ஸ்விட்ச் ஆஃப் செய்த பின்னரும் ஸ்டேண்ட் பை மோடில் இருக்கும் பொது குறிப்பிட்ட அளவும் மின்சாரம் இழுக்கத்தான் செய்யும். எனவே அவை பயன்பாட்டில் இல்லாதபோது முழுமையாக பிளக் ஆஃப் செய்ய வேண்டும்.
- பழைய டி.வி மற்றும் மானிட்டர்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. அவற்றை எல்.ஈ.டி டிவி அல்லது மானிட்டர்களால் மாற்றினால் மின்சார சேமிப்பு அதிகரிக்கும். அதேபோல், நீர் மோட்டாரை அடிக்கடி ஆயில் சர்வீஸ் செய்து இலகுவாக இயங்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் கடினமாக ஓடும் நீர் மோட்டார் கூடுதல் மின்சாரத்தை உருஞ்சும்.
5. ஃப்ரிட்ஜ் மாதாந்திர மின்சாரத்தின் சுமார் 25% நுகர்கிறது. எனவே தேவையற்ற அளவு குளிர்வை தவிர்க்கவும், கதவு ரப்பர் லீக்கேஜ் இல்லாமையையும் சரிபார்க்கவும். இதனால் மின்சாரம் வீணாவதை தவிர்க்கலாம்.
- சமையலின் சில நிமிடங்களுக்கு முன்பாகவே எலெக்ட்ரிக் ஸ்டவ்வை ஆஃப் செய்து, அதில் உள்ள மீதிவெப்பத்தை பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தும் போது, ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை சமைப்பதற்கு முன்பாக சுமார் 10 முன்பாகவே வெளியில் எடுத்துவிட வேண்டும். இப்படி உணவுப் பொருட்களை முன்கூட்டியே வெளியில் எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டுவந்தால் மின்சார சேமிப்பு கூடும்.
- துணி துவைக்கும் வாஷிங் மெஷினை ஓவர்லோடு அல்லது ஆப்லோடாக இயக்குவது இரண்டும் மின்சார வீணை ஏற்படுத்தும். சரியான அளவு துணி, தண்ணீர், டிடர்ஜெண்ட் அளவுகளை பின்பற்றி இயங்கினால் வாஷிங்க் மெஷின் துணிகளை துவைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. இதனால் மின்சார நுகர்வு குறையும்.


