இந்த காலத்தில் மூலிகைகளை தேடி அலைந்து, பல இடங்களுக்கு சென்று அதை கண்டுபிடித்து கொண்டு வந்து, மருந்தாக பயன்படுத்துவது என்பது வேண்டாம் என்று பலரும் நினைப்பார்கள். ஏனெனில் இன்றுள்ள காலகட்டத்தில் யாருக்குமே நேரம் என்பது கிடையாது. ஆனால் சில மூலிகைகளை நீங்கள் தேடி அலைய தேவை இருக்காது. அது உங்கள் கிச்சனிலேயே இருக்கும். அப்படிப்பட்ட மூலிகைகளை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
இந்த மாதிரியான மூலிகை வகைகளினால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் சமயங்களில் காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

1. 12 முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை அதிகமாக உண்டானால் ரத்த சோகை ஏற்படும். பசி குறையும். அதற்காக இந்த மூலிகை வைத்தியத்தின் மூலம் எளிய வகையில் தீர்வு காணலாம். முதலில் வேப்பங்கொழுந்தை நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு, சீரகம் ஆகியவற்றை நுணுக்கி வேப்பங்கொழுந்த்துடன் சேர்த்து பாலில் போட்டு ஊற வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அதனை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் பூச்சித்தொல்லை சரியாகும்.
2. குழந்தைகளுக்கான மற்றுமொரு அருமையான மருந்து தான் வசம்பு. இதனைப் பிள்ளை வளர்த்தி என்றும் கூட அழைக்கலாம். பசம்பை விளக்கெண்ணையில் நனைத்து, விளக்கெண்ணெய் ஊற்றியறியும் விளக்கில் காட்டி சுட்டு, அதில் உண்டாகும் கரியை பாலில் கலந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஞாபக சக்தி அதிகரிப்பது மட்டுமில்லாமல் வயிற்றில் எந்த விதத்திலும் இருந்தாலும் அது முழுமையாக நீங்கிவிடும்.
3. இன்று உள்ள காலகட்டங்களில் பெண்களை அதிகம் பாதிப்பது தைராய்டு. இந்தப் பிரச்சனை காரணம் பலமுறை பாலிஸ் செய்யப்பட்ட அரிசி வகைகளை பயன்படுத்துவது தான். நம் நாட்டில் பெண்களுக்கு சரியான உணவு பழக்கங்கள் கிடையாது. குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிட்ட பின் மிஞ்சியதை சாப்பிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரித்து தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு முள்ளங்கி, சோயா பீன்ஸ், முட்டைகோஸ் ஆகிவர்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கற்றாழையை விட்டு அதில் உள்ள சோறை எடுத்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் கசப்பு போகும் வரை கழுவி ஒரு ஸ்பூன் அளவு நாள் ஒன்றுக்கு ஒரு வேலை சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கி, தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
4. அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் செம்பருத்திப் பூவின் இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த கசாயத்தை தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை குடித்து வர ரத்தப்போக்கு குணமடையும்.


