2026 தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளாா்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து எழுந்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். ”அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. அதனால் கூட்டணி என்று கூற முடியாது என பிரேமலதா தெரிவித்துள்ளாா். மேலும், யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பதுடன் எங்கள் கூட்டணி குறித்த முழு விவரமும் வரும் ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளாா்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறபட்ட நிலையில், பிரேமலதாவின் இந்த கருத்து, கடைசி நேரத்தில் கூட கூட்டணி கணக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 2026 தேர்தலை முன்னிட்டு தேமுதிக எடுக்கும் முடிவு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறும் எனக் கருதப்படுகிறது.
அரசுஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்


