பாஜக அடக்கி வாசிப்பது நல்லது- ஜெயக்குமார்
பாஜக அடக்கி வாசிப்பது நல்லது. இல்லையெனில் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டாக்டர பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பாஜக அடக்கி வாசிப்பது நல்லது. இல்லையெனில் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதுதான் நாடாளுமன்ற தேர்தலுக்கு நல்ல விஷயமாக அமையும். உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சர் அல்ல, விளையாட்டுப் பிள்ளை அமைச்சர். அரசியல் தலைவர்களை அவர் விமர்சிப்பது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியா? அல்லது கூட்டணியா? என்பதை பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். அதிமுக எனும் நெருப்போடு பாஜக விளையாடுகிறது.

நொச்சிக்குப்பம் மீனவர்களை காக்க திமுக அரசு தவறிவிட்டது, 5 நாட்களாக போராடிவரும் மீனவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. அதிமுக ஆட்சியில் மீனவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்” என்றார்.


