- Advertisement -
விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்- செல்லூர் ராஜூ
பல படங்கள் ஹிட் கொடுக்கும் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அரசியலில் எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான். பாஜகவும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். மக்களை பாதுகாப்பே இல்லாத சூழ்நிலையில் வைத்திருப்பததுதான் திராவிட மாடல். திமுக அரசுக்கு வாய் மட்டும்தான் உள்ளது. செயலில் ஒன்றுமே கிடையாது. ஆட்சியும், நிர்வாகமும் குளறுபடியும், குழப்பமுமாக உள்ளது. திமுக அரசு விஐபிக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. ஏழை மக்களை கண்டுகொள்வதில்லை.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சில படங்கள் ஹிட் கொடுக்கும் விஷாலே அரசியலுக்கு வந்துள்ளார், பல படங்கள் ஹிட் கொடுக்கும் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்” என்றார்.


