Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை – ஆதரவாளர்கள் அதிர்ச்சி

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை – ஆதரவாளர்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடாதது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை – ஆதரவாளர்கள் அதிர்ச்சி

we-r-hiring

2026 சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணயில் இடம்பெற்றுள்ள பாஜக  தற்போது அக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக முன்னாள் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலையின் பெயர் இடம் பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தேர்தலில் அண்ணாமலை களமிறங்க வேண்டும் என உறுதியாக இருந்த பாஜக, அவரை திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட வைக்க முயற்சி செய்தது. ஆனால், கடைசி வரை கோவை வடக்கு தொகுதி  வேண்டும் என அவர் பிடிவாதமாக இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான், அண்ணாமலையை தேர்தலில் களமிறக்கும் முடிவில் இருந்து பாஜக பின்வாகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு தொண்டனாக தோள் கொடுத்து வெற்றி பெற வைப்பேன் என்று தெரிவித்துள்ளாா். 210 தொகுதிகளில் NDA கூட்டணியில் வெற்றி என்ற இலக்கை அடைய அனைவருக்காகவும் தீவிர பிரசாரம் செய்வேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டு விவாதத்திற்கு முற்றுப்புள்கி வைத்துள்ளாா்.

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியல்….

MUST READ