2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வெட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து களம் காண்கின்றன. மொத்தம் 4 முனைப் போட்டி நிலவும் சூழலில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இம்முறை தனது பரப்பை விரிவுபடுத்தி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் முக்கிய தலைவர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில், தமிழிசை சவுந்தர்ராஜன் மயிலாப்பூர் தொகுதியில், எல்.முருகன் அவிநாசி (தனி) தொகுதியில் மற்றும் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதேசமயம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக பாஜக வேட்பாளர்கள் விவரம்:
- ஆவடி – ராஜசிம்ம மஹிந்திரா என்ற அஸ்வின் குமார்
- மயிலாப்பூர் – தமிழிசை சவுந்தர்ராஜன்
- தளி – நாகேஷ் குமார்
- திருவண்ணாமலை – ஏழுமலை
- ராசிபுரம் (தனி) – பிரேம்குமார்
- மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார்
- உதகமண்டலம் – போஜராஜன்
- அவிநாசி (தனி) – எல்.முருகன்
- திருப்பூர் தெற்கு – தங்கராஜ்
- கோவை வடக்கு – வானதி சீனிவாசன்
- திருவாரூர் – கோவி. சந்துரு
- தஞ்சாவூர் – முருகானந்தம்
- கந்தர்வக்கோட்டை (தனி) – உதயகுமார்
- புதுக்கோட்டை – ராமச்சந்திரன்
- அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
- திருப்பத்தூர் – திருமாறன்
- மானாமதுரை (தனி) – பால கணபதி
- மதுரை தெற்கு – ராம ஸ்ரீநிவாசன்
- சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
- ராமநாதபுரம் – நாகேந்திரன்
- திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்
- வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் ஐயாசாமி
- ராதாபுரம் – பாலகிருஷ்ணன்
- நாகர்கோவில் – காந்தி
- குளச்சல் – சிவக்குமார்
- பத்மநாபபுரம் – ரமேஷ்
- விளவங்கோடு – விஜயதரணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிடும் மூலம் தனது வாக்கு வங்கி மற்றும் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ளது. அதிமுக கூட்டணியின் பலம், வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் நிலவும் நான்கு முனைப் போட்டி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…
