2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.
சென்னை நகரின் முக்கிய அரசியல் மையங்களில் ஒன்றான சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றது. காலை 8 மணி முதல் தொடங்கிய எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை தக்கவைத்ததுடன், இறுதியில் வெற்றியும் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் செல்வம் கடும் போட்டி கொடுத்தாலும், இறுதியில் பின்னடைவை சந்தித்தார்.

வாக்கு விவரங்களைப் பொருத்தவரை, உதயநிதி ஸ்டாலின் 51,543 வாக்குகள் பெற்றார். மறுபுறம், தவெக வேட்பாளர் செல்வம் 41,662 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 9,881 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றி திமுகவுக்கு சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் ஒரு வலுவான ஆதரவை உறுதிப்படுத்துகிறது. மேலும், மாநில அரசியலில் உதயநிதி ஸ்டாலினின் நிலைப்பாட்டை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.
