Homeசெய்திகள்சென்னைசாலை சீரமைப்புப் பணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

சாலை சீரமைப்புப் பணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

பழைய தார் அடுக்குகளை இயந்திரம் மூலம் அகற்ற உத்தரவு – சாலையின் உயரத்தை அதிகரிப்பதைத் தவிர்க்கப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல்!சாலை சீரமைப்புப் பணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

சென்னையில் மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்புப் பணிகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

we-r-hiring

சாலைகளை முறையாகச் சீரமைக்கவும், தரமற்ற பணிகளைத் தவிர்க்கவும் மாநகராட்சி பொறியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பழைய தார் அடுக்குகளை அகற்ற வேண்டும்!

சாலை சீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ள பழைய சாலையின் தார் அடுக்குகளை இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழைய சாலையின் மீது மீண்டும் மீண்டும் புதிய தார் அடுக்குகளை அமைத்து சாலையின் உயரத்தை அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய தார் அடுக்கின் தடிமனுக்கு ஏற்ப பழைய சாலையின் மேற்பரப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சீரான சாலை அமைக்க வேண்டும்!

சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு சாலையின் தற்போதைய நிலை, உயரம், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சாலையின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் இன்றி சீராக இருக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் வடிந்தோடுவதற்கு ஏற்ற வகையில் சாலையின் சரிவும் சரியாக அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூசி, கற்கள் இயந்திரம் மூலம் அகற்ற உத்தரவு!

புதிய தார் அடுக்கைப் பூசுவதற்கு முன்பு சாலையில் உள்ள தூசி, கற்கள் மற்றும் கழிவுகளை இயந்திரம் மூலம் முழுமையாக அகற்ற வேண்டும்.

இயந்திரம் மூலம் சாலையை அரைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத இடங்களில், மாற்று முறைகளைப் பயன்படுத்தி பழைய சாலை மேற்பரப்பை அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேன்ஹோல், நடைபாதைகளின் உயரத்தையும் மாற்ற வேண்டும்!

புதிய சாலை அமைக்கும்போது மேன்ஹோல்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் நடைபாதைகள் ஆகியவற்றை புதிய சாலையின் உயரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாலைகளில் ஏற்படும் உயர வேறுபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணிகளின் புகைப்படங்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்!

சாலை அரைக்கும் பணிகள் முடிந்ததும், அதன் புகைப்படங்களை மாநகராட்சி பொறியாளர்கள் எடுத்து, பொதுமக்கள் பார்வைக்காக சம்பந்தப்பட்ட பணியிடத்திலேயே காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலை சீரமைப்புப் பணிகளில் தரத்தை உறுதி செய்வதுடன், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி இந்தப் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

மாமன்றக் கூட்டத்தைக் கலைத்துவிடுங்கள்! – அதிகாரிகள் மீது மேயர் பிரியா சரமாரி குற்றச்சாட்டு!

MUST READ