Homeசெய்திகள்தேர்தல் 2026தபால் வாக்குகள் எண்ணிக்கை தீவிரம் - தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு!

தபால் வாக்குகள் எண்ணிக்கை தீவிரம் – தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு!

-

- Advertisement -

2026 சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைமுறை விதிகளின்படி, முதற்கட்டமாக தபால் வாக்குகள் (Postal Ballots) எண்ணும் பணி முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணும் மையங்களில், பதிவான வாக்குகளில் முதலில் தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இதற்காக பிரத்யேகமான மேஜைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

we-r-hiring

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, தபால் வாக்குகள் இன்று (மே 4) காலை 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை (Returning Officer) வந்தடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

யாருக்கெல்லாம் தபால் வாக்குகள்?
85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு அதிகாரிகள், பணியாளர்கள் தபால் வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த அறையில் முறையற்ற வகையில் தபால் வாக்குகளைப் பிரித்ததாகக் கூறி சில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன. இருப்பினும், வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடுகளுக்கு இடமில்லை என தேர்தல் அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் தேர்தல் பணியில் இருந்த சில அதிகாரிகளுக்கு தபால் வாக்குகள் கிடைக்கவில்லை என்ற புகாரில், கேரள உயர்நீதிமன்றம் தேர்தல் நடைமுறையில் தலையிட மறுத்துவிட்டது.

தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகியவற்றுக்கு இடையேயான கடும் போட்டி நிலவும் சூழலில், தபால் வாக்குகளின் எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணும் பணி தற்போது சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், மதியத்திற்குள் முதல் கட்ட முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ