Homeசெய்திகள்தேர்தல் 20262026 தேர்தல் - கேரளாவில் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி…

2026 தேர்தல் – கேரளாவில் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி…

-

- Advertisement -

கேரளாவில் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. பெரும்பான்கைக்க தேவையான 71 தொகுதிகளை கடந்த தற்போது 83 தொகுதிகளில் காங்கிரஸின் UDF கூட்டணி முன்னிலையில் உள்ளது.2026 தேர்தல் - கேரளாவில் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி…கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மிகப்பெரிய முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான UDF 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மறுபுறம், இடது ஜனநாயக முன்னணி  சுமார் 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியை அமைக்க 71 தொகுதிகள் அவசியமான நிலையில், UDF கூட்டணி அதனைத் தாண்டி உறுதியான முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் மூன்று முக்கிய அணிகள் களமிறங்கின. UDF சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது.

we-r-hiring

LDF சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 86 தொகுதிகளில் போட்டியிட்டது. NDA கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி 115 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்து 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது 43 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 15,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

UDF கூட்டணி வெற்றி நோக்கில் முன்னிலை வகித்துவரும் நிலையில், திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகள் காணப்படுகின்றன. ஆரம்ப நிலவரங்களே காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருப்பதால், தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்தல் முடிவு, கேரள அரசியலில் முக்கிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் தலைமையிலான UDF மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவிலும் புதிய உற்சாகத்தை அளிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!

MUST READ