2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் முன்னிலையில் சுமார் 78,058 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், அதிமுக முன்னணி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றிபெற்றுள்ளார். அவர் மொத்தம் 1,20,542 வாக்குகள் பெற்று, 78,058 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்துள்ளாா்.

இந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பிரேம் குமார் 42,484 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றார். தேர்தல் தொடக்க கட்டங்களில், தவெக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் முன்னிலையில் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், சுற்றுகள் முன்னேறியபோது நிலைமை மாறி, எடப்பாடி பழனிசாமி தெளிவான முன்னிலை பெற்று இறுதியில் வெற்றியைத் தட்டிச் சென்றார். இந்த வெற்றி, எடப்பாடி தொகுதியில் EPS-ன் நிலையான ஆதரவை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிது.
தேர்தல் 2026 – கே.என்.நேரு 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
