Homeசெய்திகள்அரசியல்பரவும் ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்

பரவும் ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்

-

- Advertisement -
ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்
அண்ணா அறிவாலயம்

கமிஷன் விவகாரம் திமுக ஆட்சியில் தலை தூக்கி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் சில ரெய்டுகள் நடந்தன. அந்த குற்றச்சாட்டுகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக நெல்லை மேயர் – திமுக கவுன்சிலர்களுக்கு இடையே எழுந்திருக்கும் மோதலால் ஆடியோ பரவுகிறது.

கமிசன் விவகாரத்தில் மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே எழுந்திருக்கும் மோதலால் சமூக வலைத்தளங்களில் ஆடியோக்கள் பரவி நெல்லை மாநகராட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த சரவணன் தான் நெல்லை மேயராக உள்ளார். நெல்லை மாநகராட்சியில் பணிகளுக்கு செய்யும் ஒப்பந்ததாரர்களிடம் வாங்கும் கமிஷன் தொகையை கவுன்சிலர்களுக்கு முறையாக பிரித்து தரவில்லை. எல்லாத்தையும் மேயரே தனியாக எடுத்துக் கொள்கிறார் என்ற குமுறல் ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது . மாநகராட்சி கூட்டத்திலும் கூட இந்த குமுறல் வெடித்திருக்கிறது .
டிரைவர் பணியிடங்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்தது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி உள்ளார்கள் கவுன்சிலர்கள். இது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தான், நெல்லை மாநகராட்சியின் ஆறாவது வார்டு திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் பேசுவது போன்று ஒரு ஆடியோ வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்
நெல்லை மாநகராட்சி

அந்த ஆடியோவில் சில கவுன்சிலர்களின் பெயர்களை குறிப்பிட்டு பவுல்ராஜ் பேசுவது போன்று இருக்கிறது. ‘’நான் இந்த பதிவை மேயர், கவுன்சிலர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளேன். மேயர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். ஒப்பந்ததாரர்களிடம் வாங்கும் தொகையை கவுன்சிலர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்’’என்று கோரிகையோடு மட்டும் அல்லாமல், ’’திமுக மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்பை நாங்கள் தான் மாற்றினோம். அதேபோல் மேயரையும் எங்களால் மாற்ற முடியும். இதையெல்லாம் உணர்ந்து மேயர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டாம்’’ என்று மேயருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்த ஆடியோ உள்ளது.

இப்படி ஒரு ஆடியோ நெல்லை மாநகராட்சி திமுகவினர் இடையே வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பான புகார் கட்சி மேலிடத்திற்கு பறந்திருக்கிறது. உளவு பிரிவு போலீசாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதை அடுத்து நேற்று இரவு பவுல்ராஜ் அவசர அவசரமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ’’நான் பேசுவது போன்று ஒரு ஆடியோவை. எடிட் செய்து வெளியிட்டு உள்ளார்கள். அது நான் பேசவில்லை. இந்த விவகாரம் பற்றி காவல்துறையின் வாயிலாக நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்’’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நெல்லை மாநகராட்சியில் பல மாதங்கள் தீர்மானங்கள் நிறைவேறாமல் இருந்துள்ளன. கடந்த கூட்டத்தில் தான் ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் பேசி முடிவுக்கு வந்திருக்கிறது. இதனால் அனைத்து தீர்மானங்களும் ஒரே நிமிடத்தில் நிறைவேறி இருக்கின்றன. இந்த நிலை தான் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கு கவுன்சிலர்கள் இடம் எதுவும் கலந்து பேசாமல் மேயரே தன்னிச்சையாக செயல்பட்டு கமிஷன் பணத்தை எடுத்துக் கொள்கிறார் என்ற குமுறல் வெடித்திருக்கிறது . மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையேயான இந்த மோதலால் அடுத்தடுத்து ஆடியோ, வீடியோக்கள் வெளியாகி சந்தி சிரித்து கிடக்கிறது திமுகவின் கமிஷன் விவகாரம்.

MUST READ