தமிழ்நாட்டில் முதன்மை அரசியல் சக்தியாக உருவெடுத்து திரு. விஜய் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் தவெக வேட்பாளர்களின் வெற்றி குறித்துக் கட்சியின் தேர்தல் அமைச்சா் ஆதவ் அர்ஜுனா முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஊழலற்ற மக்கள் நல ஆட்சி தொடரும்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ‘மக்கள் நலனே முதன்மை’ என்ற கொள்கையோடு முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான ஆட்சி சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வருகிறது.
ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, வெளிப்படையான ஆட்சி நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டார்.
இடைத்தேர்தலிலும் மகத்தான ஆதரவு தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த மாபெரும் ஆதரவைப் போல, வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியளித்தார்.
