spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுக கூட்டணி கொள்கை ; கூட்டணி உடைக்க வாய்ப்பு இல்லை - கி.வீரமணி பேட்டி

திமுக கூட்டணி கொள்கை ; கூட்டணி உடைக்க வாய்ப்பு இல்லை – கி.வீரமணி பேட்டி

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இனிப்பு வழங்கி முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, அடுத்த தலைமுறைக்கு திட்டங்கள் தீட்டுபவர் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின், களப்போராளியாக முதல்வர் திறந்து கொண்டு உள்ளார் வாழ்த்து தெரிவித்தார்.

திமுக கூட்டணி கொள்கை ; கூட்டணி உடைக்க வாய்ப்பு இல்லை - கி.வீரமணி பேட்டிநேரடியாக திமுகவை எதிர்க்க முடியாதவர்கள் குறுக்கு வழியில், அரசை கைப்பற்ற நினைக்கிறார்கள்.  பேரிடர் காலங்களில் நிதி கொடுக்க முடியாத நிலை உள்ளது அதுமட்டுமல்லாமல் மாநிலத்திற்கு கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை.  இந்தியை திணித்து சமஸ்கிருத மொழியை கொண்டு வருவதுதான் அவர்களின் நோக்கம்.

we-r-hiring

வடக்கு இருக்கக்கூடியவர்கள் இரு மொழிக் கொள்கை மாற்றி மும்மைக் கொள்கை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். ஒன்றிய அரசு போர்க்களம் போன்று செயல்பட்டு வருகிறது. எந்த மாநிலத்திற்கும் அவர்களுடைய அதிகாரத்தை பறிக்கக்கூடாது. ஏதோ ஒரு காரணம் சொல்லி அதிக மக்கள் இருக்கக்கூடிய பகுதியில் -0தொகுதிகளை குறைக்க முயற்சிக்கிறார்கள்.

ஒரு மாணவன் நன்றாக படித்தால் அவரை ஊக்குவிக்க வேண்டும் அதை தவிர்த்து, நீ நன்றாக படிக்கிறாய் என்று அவர்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது. திமுக கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள், கொள்கை கூட்டணியை  உடைக்க வாய்ப்பு இல்லை. கூட்டணி கட்சிகளை உடைக்க நினைத்தால் பரிதாபத்தை பெறுவதற்கு எண்ணங்களை தான் அவர்கள் பெறுவார்கள்.

சில்லறைத்தனமான அரசை நடத்தக்கூடாது, எந்த ஒரு அசிங்கமான பொருட்களை வீசினாலும், திராவிட இயக்கம் வெல்லும். எங்கள் சார்பில் ஒரு தொடர் பிரச்சாரத்தை நாங்கள்  தொடங்க உள்ளோம். வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை கொடுப்பது தமிழ்நாடு தான். சந்திரயான் திட்டம் சாதனை படைத்தவர்கள் கூட இரு மொழி கொள்கை மூலம் படித்தவர்கள்தான்.

திமுக கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள், அதனை உடைக்க வாய்ப்பு இல்லை. கூட்டணி கட்சிகளை உடைக்க நினைத்தால் பரிதாபத்தை பெறுவதற்கு எண்ணங்களை தான் அவர்கள் பெறுவார்கள். சில்லறைத்தனமான அரசை நடத்தக்கூடாது, எந்த ஒரு அசிங்கமான பொருட்களை வீசினாலும், திராவிட இயக்கம் வெல்லும் என பேசினார்.

MUST READ