கட்சியை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிலும் செல்லவில்லை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு தான் கட்சியே ஆரம்பித்திருக்கிறேன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் ஆனால் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன் என நெல்லையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரபரப்பு பிரச்சாரம் மேற்கொண்டாா்.
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனி விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்து அங்கிருந்து கேரவன் மூலமாக கேடிசி நகருக்கு வந்து பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க. உங்க மகன், உங்க அண்ணன், அன்பு தம்பி, உங்க விஜய். உங்களைத் தேடி வந்திருக்கிறேன். ஸ்டாலின் சார் கையில் இந்த பவர் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதோ ஒரு முட்டுக்கட்டை போட்டு வரவிடாமல் செய்திருப்பார். திமுக அரசாங்கம் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் நெருக்கடிகள் அதையும் தாண்டி இன்னும் சில பேர் அவதூறுகள் பரப்புகின்றனர்.

திமுக கூட்டணிக்கு பாஜக கூட்டணிக்கும் இவங்க ரெண்டு பேருமே வெளியில் வேண்டுமானால் தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள்ளே ரெண்டு பேரும் ஒன்றுதான். அவர்களுக்கு ஒரே நோக்கம்தான். விஜய் எதுவுமே மக்களுக்கு செய்யக்கூடாது என்று செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் உங்களோடு இருப்பது அவர்களுக்கு அதிக கோபம் இருக்கிறது. கூட்டணி கணக்கெல்லாம் எதுவும் இல்லாமல் போய்விட்டது. தற்பொழுது கல்லாபட்டி கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
திமுக கூட்டணியில் இருப்பவர்களே அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் அந்த நிலைமை இருக்கிறது. பாஜக கூட்டணியும் அதே போல் தான். அவர்களுடனும் சில பேரை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம் அவர்களின் பிரச்சனை இது. சிறுபான்மை மக்களோட திமுக சாயம் வெளுத்துப் போய்விட்டது. சிறுபான்மை மக்கள் என் பக்கம் இருப்பதால் திமுகவிற்கும் பாஜகவிற்கும் என் மீத பொறாமை. இந்த 33 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் மக்களின் மனதிற்குள்ளேயும் செல்வதற்கு நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.
கட்சியை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிலும் செல்லவில்லை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு தான் கட்சியே ஆரம்பித்திருக்கிறேன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் ஆனால் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன். கரூர் பிரச்சனை குறித்து ஊருக்கே தெரியும். ஆனால் விஜய் மேல கேச தூக்கி போடு என்று கூறினார்கள். ஆனாலும் விஜய் பக்கம் மக்கள் உள்ளார்கள். படத்தை முடக்கினார்கள். அதையும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் சமயம் என்பதால் நம்முடைய இருப்பவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள். அதையும் எடுபடவில்லை. திமுகவாலயும் பாஜகவாலயும் யாராலயும் எதுவும் செய்ய முடியாது.
234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர். இப்படிப்பட்ட தொண்டர்கள் இருப்பதால்.வேட்பாளர்கள் வேறு விஜய் வேறு என்று நினைத்து விடாதீர்கள் விஜய் தான் வேட்பாளர் வேட்பாளர் தான் விஜய். இத்தனை ஆண்டுகள் யார் யாருக்கெல்லாம் ஓட்டு போட்டீர்கள். ஆனால் இந்த முறை விஜய்க்கு ஓட்டு போடுங்கள். நம்முடைய வேட்பாளர்களுக்கு நாம் ஓட்டு போட்டால் நாமே ஜெயிப்பது போல. இந்த தேர்தல் இந்தியாவிலேயே யாரும் பார்த்திருக்காத தேர்தல். ஒரு காமராஜர் தானா? ஒரு அம்மா தானா? ஒரு எம்.ஜி.ஆர் தானா? மற்ற யாரும் வந்த இடத்திற்கு வந்து விடமாட்டார்களா என்று ஏங்குவது எனக்கு தெரியும்.
முத்துராமலிங்கம், வ உ சி, கட்டபொம்மன், ஒண்டிவீரன், பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் போலவே நாங்களும் உழைப்போம்.டிவி கே ஆட்சி அமைந்ததும் பெண்கள் இளைஞர்கள் எல்லோருமே நன்றாக இருப்போம். விவசாயிகள் மீனவ மக்கள் அனைவருமே உழைக்கும் மக்கள் அனைவருமே நன்றாக இருப்போம். அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் வேறு யாருக்காவது ஓட்டு போட்டு ஓட்டை வேஸ்ட் செய்து விடாதீர்கள்.
செய்ய முடியாததெல்லாம் நாங்கள் சொல்லவே மாட்டோம். செய்யறதை மட்டும் தான் சொல்வோம். சொல்லாததையும் செய்வோம் அது வேற விஷயம். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை.நான் கூறுவது போல இப்போது ஆண்டவர்கள் இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் தில்லாக கூற முடியுமா. வன்முறை ஏன் தலைவிரித்து ஆடுகிறது இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா ஸ்டாலின் சார். இரண்டரை வயது குழந்தையை உங்க திமுக நிர்வாகி ஒருத்தன் கொன்னான அதற்கு என்ன சொல்ல போறீங்க. விளாத்திகுளத்தில் சிறுமி ஒருவர் இறந்தார் இந்த குழந்தைகளை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா?
காவல்துறையை கையில் வைத்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். அதை ஏன் தடுக்கவில்லை. அதுதான் எங்களுடைய கேள்வி. டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட எங்கு பார்த்தாலும் ஊழல். இந்த தேர்தலில் பணத்தை எல்லாம் வைத்துக்கொண்டு எதையும் கிழிக்க முடியாது. விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்திற்கான தேர்தல்.இது மாற்றத்தை கொண்டுவதற்கான தேர்தல் இதை உங்களாலையும் மற்றவர்களாலும் தடுக்க முடியாது.
ஏப்ரல் 23ஆம் தேதி வீட்ல இருக்க சாமிகள் எல்லாம் கும்பிட்டுவிட்டு ஓட்டர் ஐடிஐ கையில் எடுத்துவிட்டு செல்லுங்கள். ஒரு நாளும் பொய் சொல்லி நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். அனைத்தையும் விட்டு வந்திருக்கிறேன். இருமுனை போட்டி தான் ஒன்று டிவி கே மற்றொன்று திமுக.
ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள். தயவு செய்து ஓட்டு போடுங்கள். உங்க விஜய் நான் வரேன் விசில் அடிக்க ரெடியா என்று பேசினார்.
பின்னா் ஏடிசி நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் அவர்கள் கட்சிக்கு சொந்தமான தேர்தல் பாடலை பாடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதனிடையே பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் நடைபெற்ற நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ரசிகர்கள் தொண்டர்கள் நீண்ட நேரம் காத்திருந்த காரணத்தினால் இஸ்லாமிய பெண் மற்றும் ரசிகர் ஒருவர் உட்பட இருவர் மயக்கமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆசுவாசப்படுத்தினார்கள்.
தவெக பொதுக்கூட்டம்: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை; திமுகவை நம்பாதீர்கள் – நடிகர் விஜய் உரை!
