spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்என்னை தூக்கிலிடுங்கள்-அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

என்னை தூக்கிலிடுங்கள்-அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

-

- Advertisement -

என்னை  தூக்கிலிடுங்கள்-அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

நான் ஒரு பைசா ஊழல் செய்தேன் என்று நிரூபித்தால் என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள் என்று ஆவேசப்பட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

we-r-hiring

டெல்லியில் மதுபானக் கொள்கை ஊழல் குறித்து அம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16ஆம் தேதி அன்று சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது.

என்னை  தூக்கிலிடுங்கள்-அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வரும் ஆன அரவிந்த் கெஜ்ரிவால், என் மீது சீபிஐ, தமிழாக்கத் துறை என்று எல்லாவற்றையும் ஏவி விடுகிறார்கள். எப்படியாவது கெஜ்ரிவால் ஒரு திருடன் . அவனும் ஊழலில் ஈடுபட்டுள்ளான் என்று நிரூபிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் . நான் பிரதமர் மோடிக்கு சொல்கிறேன்.. நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபித்தால் என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள் என்று ஆவேசப்பட்டார்.

MUST READ