spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இந்தியாவுக்கு முதல் முக்கியத்துவம்… அமெரிக்க வெளியுறவு செயலாளர் பதவி ஏற்ற உடனே அதிரடி..!

இந்தியாவுக்கு முதல் முக்கியத்துவம்… அமெரிக்க வெளியுறவு செயலாளர் பதவி ஏற்ற உடனே அதிரடி..!

-

- Advertisement -

டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. புதிய டிரம்ப் நிர்வாகம் பதவியேற்றவுடன், அமெரிக்கா, இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மரோ ரூபியோ,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸ் ஆகியோர் முறையே இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் முதல் இருதரப்பு- சர்வதேச சந்திப்புகளை நடத்தினர்.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வாஷிங்டனில் உள்ளார்.உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு உயர்மட்ட இராஜதந்திரிகளுக்கு இடையிலான சந்திப்பு அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஃபோகி பாட்டம் தலைமையகத்தில் நடந்தது. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியான பிறகு முதல் குவாட் அமைச்சர்கள் சந்திப்புக்கு முன்னதாக இருதரப்பு சந்திப்பு நடந்தது.

we-r-hiring

இந்தியாவின் எஸ்.ஜெய்சங்கருடன் தனது முதல் இருதரப்பு சந்திப்பை நடத்த மார்கோ ரூபியோ முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.ஏனென்றால் முந்தைய எந்தவொரு புதிய அமெரிக்க நிர்வாகத்திலும் முதல் வெளிநாட்டு தொடர்பு பாரம்பரியமாக அதன் இரண்டு அண்டை நாடுகளான கனடா, மெக்ஸிகோ அல்லது அதன் நேட்டோ நட்பு நாடுகளுடம் மட்டுமே நடத்தப்படும்.

புதிய அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ- டாக்டர் ஜெய்சங்கர் இடையேயான இருதரப்பு சந்திப்பு, அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற ஒரு மணி நேரத்திற்குள் நடைபெறுகிறது. இரு தலைவர்களும் பரந்த அளவிலான விவாதங்களை நடத்தினர். அப்போது அவர்கள் இந்தியா-அமெரிக்க முக்கிய கூட்டாண்மையின் முழு வரம்பையும் ஆராய்ந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் குவாட்ராவும் கலந்து கொண்டார்.

சந்திப்பு முடிந்த உடனேயே, செயலாளர் ரூபியோவும், டாக்டர் ஜெய்சங்கரும் சர்வதேச பத்திரிகையாளர்கள் முன் கூட்டாகத் தோன்றினர். அங்கு அவர்கள் கைகுலுக்கி அதிகாரப்பூர்வ புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

 

MUST READ