Homeசெய்திகள்அரசியல்பல்லாவரம் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் அதிமுக சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு…

பல்லாவரம் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் அதிமுக சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு…

-

- Advertisement -

இந்திய ஜனநாயக கட்சியின் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள வழக்கறிஞர் வெங்கடேசன் அந்த தொகுதிக்குட்பட்ட மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.பல்லாவரம் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் அதிமுக சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு…பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அ.தி.மு.க சார்பாக பொழிச்சலூர் பகுதி கழக செயலாளர் பாபு தலைமையில், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த வேட்பாளரான வழக்கறிஞர் வெங்கடேசன் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக பொழிச்சலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் நடந்து சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது அவருடன் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.தன்சிங், பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பாஜக மாவட்ட தலைவர் ரகுராமன், பாஜக மாவட்ட துணைத் தலைவரும் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அமைப்பாளருமானர் ப.விஜயலட்சுமி, அதிமுக மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் வள்ளி, பாஜக பம்மல் பொழிச்சலூர் மண்டல தலைவர் டாக்டர் கே.எஸ்.செந்தில் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அப்பகுதி வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து பொழிச்சலூர் அம்மன் ஆலயம் அருகில் சென்று போது வேட்பாளர் வெங்கடேசனுக்கு பொதுமக்கள் பலர் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த வெங்கடேசன் உற்சாகத்துடன் பொது மக்கள் தன் மீது தூவிய அதே பூக்களை எடுத்து பொதுமக்கள் மீது மீண்டும் தூவி நன்றி தெரிவித்து கொண்டார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை வெங்கடேசன் கேட்டு கொண்டார்.

தவெக வேட்பாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

MUST READ