Homeசெய்திகள்அரசியல்எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் - நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்

எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்

-

- Advertisement -

புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். விஜய் மட்டும்தான் கூட்டம் கிடையாது. அஜித்திற்கு இன்னும் பயங்கரமான கூட்டம் இருக்கிறது என கூறினாா்.எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் - நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்சென்னை திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் குப்பனை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்கள் கலந்து கொண்ட  பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நிர்மலா பெரியசாமி மற்றும் மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களுடன் பேசிய நிர்மலா பெரியசாமி, “தொகுதியில் விஜய் விசில் எல்லாம் வரைந்தார் முழுக்க வரைந்தாரா அல்லது மூடுமாறி திரும்ப போய் விட்டாரா? பிரச்சாரத்திற்கு போகிறவர் ஒரு ஊருக்கு சென்று விட்டு மற்றொரு இடத்திற்கு போகாமல் செல்கிறார். ஒரு ஊரில் பாதியில் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டுப் போகிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும் விஜய்யையும்  தயவு செய்து ஒப்பிடாதீர்கள்  பொதுமக்களுக்கு என வேண்டுகோள் விடுத்தாா்.

we-r-hiring

நடிகராக பெயர் வாங்கிய விஜய் மக்களுக்கு இதுவரை தொண்டாற்றவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி யார் மக்களுக்காக எவ்வளவோ செய்துள்ளார்கள். எடப்பாடி பற்றி பேச வேண்டுமென்றால் நாள் முழுவதும் பேட்டி கொடுக்கலாம் அந்த அளவுக்கு சொல்ல முடியும்.

ஆனால் விஜய் வந்த இரண்டு வருடத்தில் மக்களிடத்தில் பிரியத்தை, தொண்டு மனப்பான்மையை காண்பித்ததே கிடையாது. சேவை எல்லாம் இல்லவே இல்லை சினிமாவில் ஹீரோ போன்று வந்துவிட்டு சென்று விடுகிறார். இரண்டு தொகுதியிலும் அவர் வெற்றி பெற மாட்டார். வெற்றி பெற்றால் மாதம் ஒரு முறை தொகுதி மக்களை சந்திப்பேன் என்று கூறிய விஜய் கேட்கும்போதே  சிரிப்பாக இருக்கிறது. மாதம் ஒருவரை  என்று கண்டிஷன் பெயில் மாதிரி சொல்லும் விஜய்யை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் விஜய் படம் பாருங்கள் முதல் நாளில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சம்பாதித்து கொண்டு போய் கொடுங்கள் அவருக்கு வாக்களித்து அவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இளைஞர்கள் உடைய வாக்குகள் வீணாகிவிடும். யார் இதுவரை உங்களுக்கு உழைத்து உள்ளார்களோ செய்து இருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் விஜய் கட்சிக்கு ஓட்டு போடுவது மிக மிக வேஸ்ட். விஜய் ஒரு அரசியல்வாதியே ஆகவில்லை அரசியல்வாதியாக பரிணமிக்கவில்லை அவருக்கு நேரம் தேவைப்படுகிறது.

5 வருடங்கள் காத்திருந்து மக்களுக்காக ஏதாவது செய்து நம்பிக்கை பெற வேண்டும். 41 பேர் இறந்து போனார்கள் வேறு யாராவது இருந்தால் வண்டியில் இருந்து இறங்கி ஓடிச் சென்று வேட்டிய மடித்துக்கொண்டு தனக்கு ஆபத்து இருந்தாலும் கூட என்ன ஆச்சு என்று பதறுவார்கள். விஜய்க்கு அத்தனை பவுன்சர்கள் இருக்கும் பொழுது ஏன் உங்களுக்கு பயம்? மக்களிடம் அவ்வளவு பயப்படுகிறீர்கள் அடுத்த நிமிடம் ஆளை காணவில்லை ஒன்னரை மணி நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் உள்ளார் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார்.

செல்வதற்கு அவ்வளவு யோசனையாக தயக்கமாக பயமாக இருக்கிறது என்றால் எதுக்கு உங்களுக்கு அரசியல். அரசியலுக்கு வந்து நீங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள். அதையெல்லாம் ஏதாவது சொன்னீர்களா தேர்தல் அறிக்கை அப்படியே அதிமுக உடைய காப்பி. விஜயும் அப்படித்தான் காங்கிரஸ் வர போறாக விடுதலை சிறுத்தைகள் வரப்போறாக கம்யூனிஸ்ட் எல்லாம் வந்தே விட்டாக என்னென்ன எல்லாம் சொன்னீர்கள். கடைசியில் ஒருவர் திரும்பி பார்க்கவில்லை  பனையூர் பக்கமே ஒருத்தரும் போகவில்லை. இப்போ என்ன இருக்கு உங்களிடம் 40 சதவீதத்திலிருந்து இப்போ 10 சதவீதத்திற்கு வந்து உள்ளீர்கள்.

தமிழக மக்களை அவ்வளவு சாதாரணமாக நினைக்காதீர்கள் அவ்வளவு அறிவு இல்லாதவர்கள் என்று நினைக்காதீர்கள் தமிழ் சமூகம் மிகவும் அறிவானது சரியான நேரத்தில் என்ன செய்யணும் அதை செய்வார்கள். குடும்பத்தில் இளைஞர்கள் பாட்டிகளிடமும் அம்மாவிடமும் அப்பா இடமும் விஜய்க்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்று கேட்கிறார்கள். திமுக அண்ணா திமுக வேண்டாம் விசிலுக்கு போடுங்கள் என்று கேட்கிறார்கள்.

இரட்டை இலை மட்டும் தான் உங்களை காப்பாற்றும் பெரியவர்கள் இளைஞர்களிடம் சொல்ல வேண்டும். விஜய் நடித்த படம் என்றால் போய் பார் என் பணத்தை கூட கொடுக்கிறேன் போய் விசில் அடித்து கொண்டு இரு. ஆனால் அரசியலில் அண்ணா திமுகவும் இரட்டை இலை மட்டும் தான் காலம் காலமாக தமிழ்நாட்டை காப்பாற்றுகின்றது.  அதற்கு தான் ஓட்டு போடுவேன் நீயும் அதற்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று சொல்லுங்கள்.

விஜய் பிரபலமான நடிகர் அவருக்கு மட்டும் தான் கூட்டம் என்று கிடையாது. அஜித்திற்கு இன்னும் பயங்கரமான கூட்டம் இருக்கிறது. இவரை விட அவர் அதிகமான பிரபலமானவர். சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், கார்த்தி, சூர்யா ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அத்தனை பேருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக விஜய் பின்னாடி இருக்கிறார்கள் என்பது தவறான பிம்பம். மாயை உருவாக்குகிறார்கள். இந்த இளைஞர் கூட்டம் பல பங்காக பிரிந்து இருக்கின்றன. விஜய்க்கு தான் அத்தனை பேரும் வாக்களிப்பார்கள் என்பதை அறிவு உள்ளவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படியே போட்டால் அந்த வாக்கு வீண் அடிக்கிறீர்கள். மறு வரை மசோதா தோல்வி அடைய தான் செய்யும்.

எந்த மசோதாவும் மாநிலங்களவையில்  மூன்றில் இரண்டு பங்கு பேர் வாக்களிக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு கூட்டணி கட்சிகளுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இல்லை. எதிர்த்து வாக்களித்த திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் பெண்களுக்கு எதிரானவர்கள். 33 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று காலம் காலமாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.

சோனியா காந்தி அதிகாரத்தில் இருந்த போதும் கொண்டுவர முடியவில்லை. தற்பொழுது பிஜேபி கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது அப்படி இருந்தும் எதிர்த்து வாக்களிக்கிறார்கள். 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு உறுதி என்று பிரதமர் மோடியே சொல்லிவிட்டார் அப்படி இருக்கும் பொழுது வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்கள். எப்படி பிரதமராக ஜிகே மூப்பனாரை கொண்டு வரவில்லையோ, அப்துல் கலாமை இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக ஆவதற்கு உதவி பண்ண வில்லையோ, அதேபோன்று சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி அவருக்கு எதிராக வாக்களித்தீர்களோ, தொடர்ந்து தமிழ் சமூகத்திற்கு எதிராக நிலைப்பாட்டியே திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணி கட்சிகளும் எடுத்துக் கொண்டு இருக்கிறது. இதனை பெண்கள் மன்னிக்கவே மாட்டார்கள்” என்று நிர்மலா பெரியசாமி கூறினார்.

த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா சொத்து விவகாரம் – விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு

MUST READ