Homeசெய்திகள்சென்னைபட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி: தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரிந்த தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரம்!

பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி: தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரிந்த தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரம்!

-

- Advertisement -

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வளாகத்தில் உலா வந்த தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தெருநாய்களை

we-r-hiring

முதலமைச்சர் அலுவலக நுழைவுவாயிலில் அதிரடி நடவடிக்கை:

சென்னை தலைமைச் செயலகத்தில் சமீப காலமாகத் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாகத் தலைமைச் செயலகத்திலிருந்து விடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் நாய் பிடிக்கும் பிரிவு ஊழியர்கள் வளாகத்திற்குள் முகாமிட்டுத் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 3 முதல் 4 நாட்களில் மட்டும் தலைமைச் செயலக வளாகத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று நேரடியாக முதலமைச்சர் அலுவலகம் செல்லும் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 6-க்கும் மேற்பட்ட தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை விரித்துப் பாதுகாப்பாகப் பிடித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை – பாதுகாப்பு ஏற்பாடு:

வரும் 5ஆம் தேதி முதல் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் மற்றும் அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளும் இப்பகுதி வழியாக வந்து செல்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கருதி தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள நாய்களைப் பிடிக்கும் பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் நெஞ்சை பதறவைத்த விபத்து: அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பெண் தொழிலாளி பரிதாப பலி!

MUST READ