- Advertisement -
திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“எதிர்க்கட்சிகளை முடக்குவது கண்டிக்கத்தக்கது. கருத்துக்களை வெளிப்படுத்துவது ஜனநாயக உரிமை. கருத்துக்களுக்குக் கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பு.
கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கை மூலம் கையாளக் கூடாது.”

ஜனநாயக ரீதியாகக் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ள நிலையில், அடக்குமுறை மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
