spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பூவிருந்தவல்லியில் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகி மறைவிற்கு நேரில் ஆறுதல்

பூவிருந்தவல்லியில் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகி மறைவிற்கு நேரில் ஆறுதல்

-

- Advertisement -

பூவிருந்தவல்லியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகி மறைவிற்கு நேரில் ஆறுதல் கூறினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக பொருளாளரும் மூத்த நிர்வாகியுமான ஜாவித் அகமது கடந்த வாரம் மாரடைப்பால் திடீரென உயிர் இழந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இறங்கல் தெரிவித்திருந்தார்.

we-r-hiring

இந்த நிலையில் இன்று காலை பூவிருந்தவல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். பின்னர் அவரது புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், பி.வி.ரமணா, அப்துல் ரஹிம், மூர்த்தி,முன்னாள் எம்.எல்.ஏகளும் இருந்தனர்.

MUST READ