Homeசெய்திகள்அரசியல்கள்ளநோட்டு அச்சடிப்பு: போலீஸை கண்டதும் தப்பி ஓடிய விசிக மாவட்ட பொருளாளர்..!

கள்ளநோட்டு அச்சடிப்பு: போலீஸை கண்டதும் தப்பி ஓடிய விசிக மாவட்ட பொருளாளர்..!

-

- Advertisement -

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கொட்டகை அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள அதர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர் வசிக்கும் கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து கள்ள நோட்டு அச்சடித்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று பார்த்துள்ளனர்.

போலீசார் வருவதை கண்ட விடுதலை சிறுத்தைகள் பற்றிய நிர்வாகி செல்வம் உள்ளிட்ட கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் இருந்து தப்பி ஓடி உள்ளது. இந்த குற்ற சம்பவத்திற்கு பின்னணியில் இருக்கும் நபர்களை முழுமையாக கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, அந்த கொட்டகையில் போலீசார் சோதனை செய்தபோது, 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள், வாக்கி டாக்கி, ஏர்கன் பிஸ்டல், பிரிண்டிங் மிஷின், கவுண்டிங் மெஷின், பேப்பர் பண்டல் இருப்பதை கண்டறிந்தனர். உறுப்பினர் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கள்ள நோட்டு அச்சடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் பற்றி நிர்வாகி செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கள்ள நோட்டு அச்சடிப்பதற்காக பயன்படுத்திய இயந்திரங்கள் மற்றும் பொருட்களை விஞ்ஞான சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதனிடையே கள்ள நோட்டு அச்சடித்த சம்பவத்தில் சிக்கிய செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கம் செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உத்தரவிட்டுள்ளது.

 

MUST READ