spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுகவின் வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது நிர்வாகிகளுக்கு ஆ ராசா அறிவுரை

திமுகவின் வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது நிர்வாகிகளுக்கு ஆ ராசா அறிவுரை

-

- Advertisement -

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுகின்ற 2026 தேர்தலில் மனக்கசப்புகளை தூக்கி எறிந்து விட்டு வெற்றிக்காக பாடுபட வேண்டும். திமுகவின் வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு ஆ ராசா அறிவுரை வழங்கியுள்ளாா்.திமுகவின் வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது நிர்வாகிகளுக்கு ஆ ராசா அறிவுரைதிருவொற்றியூர் தனியார் திருமண மண்டபத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தலைமையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம்  திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ,வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநகராட்சி மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் வட்ட பிரதிநிதிகள் பொதுகுழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய ஆ ராசா, ” 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பிம்பங்கள் வெற்றியை உருவாக்கும் செயல்முறைகள் என்ன என்பதெல்லாம் ஆய்வு செய்து தலைமை கழகத்திற்கு சொல்லவும், தலைமை கழகம் சொல்கின்ற பணிகள் எல்லாம் நாம் வழி நடத்தவும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

திமுகவின் பலம் பலவீனம் பற்றியும், எதிர்காட்சி மற்றும் கூட்டணி கட்சிளின் பலம் பலவீனம் ,தேவைகள் என்ன ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

திமுக நிர்வாகிகள் இடையே சில மனக்கசப்புகள் விரிசல்கள், கருத்து மோதல்கள் என சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும் அவற்றை எல்லாம் சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்சனை இருந்தால் அவற்றை கலைந்து விட்டு கட்சிக்காக பணியாற்ற வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் ,நாடாளுமன்ற தேர்தல் போலஅல்ல. மிக நுணுக்கமாக பார்க்க வேண்டும். எம்.பி.பி.எஸ். , ஐ.ஏ.எஸ் படித்த உயர்  சமூகத்தினர் அரசியலில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள் அவர்களை எப்படி அணுக வேண்டும் எனபதை திட்டமிடல் வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கென்று தனியான கோட்பாடு உள்ளது. இந்த தேர்தல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்ற தேர்தல் அல்ல.

அவரை போன்ற அரசியல் ஆளுமை மிக்க முதல்வர் இந்தியாவிலேயே யாரும் இல்லை. இந்த தேர்தல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுகின்ற தேர்தல் ஆகையால் நாம் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

எடப்பாடி பிஜேபி உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். பிஜேபி எந்த அரசுக்கும் உண்மைக்கும் வாய்மைக்கும் நியாயத்திற்கும் கட்டுப்படாத அரசியல் கட்சி.

நமது வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது. கூட்டணி கட்சிகளோடு சென்றாலும் காங்கிரஸ் சிபிஎம் ,சிபிஐ ,விடுதலை சிறுத்தைகள் ,வைகோ யாராக இருந்தாலும் எல்லோரையும் அரவணைத்து சொல்ல வேண்டும் என்ற தாயுள்ளம் தலைவருக்கு இருந்தாலும்,  திமுக சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அவர்களை சார்ந்திருக்கக்கூடாது  என ஆலோசனைகள் வழங்கினார்.

அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி

MUST READ