spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்2026 தேர்தல்… இரட்டை இலக்கத்தில் உறுதியாக நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

2026 தேர்தல்… இரட்டை இலக்கத்தில் உறுதியாக நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

-

- Advertisement -

திமுக கூட்டணியுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இரட்டை இலக்க தொகுதியில் உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.2026 தேர்தல்… இரட்டை இலக்கத்தில் உறுதியாக நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் 6 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்பதாகவும் அதிலும் இரட்டை இலக்க தொகுதியில் உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.

கடந்த 27-ம் தேதி திமுகவுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நிலையில், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் இரட்டை இலக்கு தொகுதியை கேட்க உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தகவல் தெரிவித்துள்ளாா்.

உடல் உறுப்புகள் தானம்; வயதைக் கடந்த மனிதநேயத்தை பிரதிபலிக்கிறது – டாக்டர் சோமசேகரா

we-r-hiring

MUST READ