spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி

மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி

-

- Advertisement -

“மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!” என்பது போல, ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கும், மாநில அரசான நாம் நிதி அளித்து வருகிறோம் எந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா?” விமர்சனம் செய்கிறார் என்று சேலத்தில் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

we-r-hiring

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு கடந்த 12ஆம் தேதி சென்றிருந்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் ரோடு ஷோ நடத்தினார். ஜூலை 12ஆம் தேதியன்று காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து காவிரி ஆற்றில் பூக்களை தூவினார்.

சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பிரதமர் பேரில் இருக்கக்கூடிய திட்டங்களுக்கு மாநில அரசு தான் 50% நிதி தருகிறது. மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி கொடுத்து வருகிறது. நீங்கள் எல்லோரும் படையப்பா படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு காட்சி வரும். மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னுடையது என ஒரு டயலாக் வரும்.

மத்திய அரசு திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி கொடுத்து வருகிறது. இப்படி இருக்கும்போது நாம் நிதியை மடைமாற்றுவதாக எந்த அடிப்படையில் அமித்ஷா குற்றம்சாட்டுகிறார்? மத்திய அரசு தான் தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு உரிய நிதியை தருவதில்லை. ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா பிளேட்டை திருப்பிப் போடுகிறார்” என்று கடுமையாக சாடினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

MUST READ