spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதை பாராட்டுகிறோம்- தமிமுன் அன்சாரி

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதை பாராட்டுகிறோம்- தமிமுன் அன்சாரி

-

- Advertisement -

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதை பாராட்டுகிறோம்- தமிமுன் அன்சாரி

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்து உரையாற்றினார்.

Image

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்துள்ள நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன்,தமிமுன் அன்சாரியும் அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆலோசனையில் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

we-r-hiring

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, “20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை எவ்வித பேதமும் இன்றி விடுவிக்க நாங்கள் கோரி வருகிறோம். அதுபற்றி வலியுறுத்தவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்துள்ளோம். அதிமுக மதுரை மாநாட்டு தீர்மானத்திற்கு நன்றியும் கூறியுள்ளோம்.

Image

எடப்பாடி பழனிசாமியுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்காக ஈபிஎஸ்க்கு பாராட்டு தெரிவித்தோம். துணிச்சலான முடிவை எடுத்துள்ளீர்கள் என ஈபிஎஸ்ஸிடம் கூறினோம். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது ஒரு நல்ல செய்தி” என்றார்.

 

MUST READ