spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஆளுநரை மாற்ற வேண்டும், பல்கலைகழக வேந்தராக முதல்வரை நியமிக்க வேண்டும் - சட்டப்பேரவை பொது கணக்கு...

ஆளுநரை மாற்ற வேண்டும், பல்கலைகழக வேந்தராக முதல்வரை நியமிக்க வேண்டும் – சட்டப்பேரவை பொது கணக்கு ஆய்வு குழு தலைவர் செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து சட்டமன்ற பேரவை பொது கணக்கு ஆய்வு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலை கழகத்தில் கடந்த 2016, 17, 18 ஆகிய ஆண்டுகளில் பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அதுகுறித்து முழுமையான கோப்புகளை சென்னை தலைமை செயலகத்திற்கு எடுத்து வர அறிவுரை வழங்கப்பட்டது, மேலும் முழுமையான விசாரனை நடத்திட இருப்பதாகவும் தெரிவித்ததுடன் அழகப்பா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு நேரம் கேட்டு ஆளுநரிடம் முறையிட்டுள்ளதாகவும் ஆனால் ஆளுநர் அதற்கு காலம் தாழ்த்திவருவதாகவும் கூறினார்.

we-r-hiring

அரசியல்வாதிகளைபோல சர்ச்சை கருத்துகளை ஆளுநர் பேசிவருவதாகவும் கடந்த 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்திருப்பதாகவும் அதனை அவர் திரும்ப பெற வேண்டும் என்றும் அவ்வாறு திரும்ப பெறாத பட்சத்தில் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்ததார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலிமையான முதல்வர் ஆட்சி நடத்திவரும் நிலையில் ஆளுநர் ஆட்சி நடத்த தேவையில்லை என்றார்.ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் பல்கலைகழக வேந்தராக முதல்வரை நியமிக்க வேண்டும் என்றும் பேசினார். மேலும் அதிமுகவில் யார் தலைவராக வேண்டும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க தான் தீர்மாணித்து வருகிறது என்றும் பேட்டியளித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் ஆய்வு குழு உறுப்பினர்களான காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ சிந்தனை செல்வன், திருத்துரைப்பூண்டி எம்.எல்.ஏ மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

MUST READ