- Advertisement -
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பாராஸ்ட்ரோடு 7வது தெருவை சேர்ந்தவர் பிரிட்டிஷ் (52). திமுக வார்டு பிரதிநிதியான இவர், தற்போது தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி 26வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.


நேற்றிரவு(21.02.2023) இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தாமாக தவறி விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால் இன்று(22.02.2023) மாலை உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் 3மகள்கள், 1மகன் என 4பிள்ளைகள் உள்ளனர்.


