Homeசெய்திகள்அரசியல்திருமாவளவன் முதல்வர்... சௌம்யா அன்புமணி துணை முதல்வர்? எடப்பாடி பழனிசாமி ஆவேசத்தால் நழுவிய வாய்ப்பு! –...

திருமாவளவன் முதல்வர்… சௌம்யா அன்புமணி துணை முதல்வர்? எடப்பாடி பழனிசாமி ஆவேசத்தால் நழுவிய வாய்ப்பு! – அதிரவைக்கும் பின்னணி தகவல்

-

- Advertisement -

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் திரைமறைவில் மிகப்பெரிய அரசியல் சதுரங்க ஆட்டம் நடந்துள்ளதாகத் தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமாவளவன்

we-r-hiring

நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தவித்துக்கொண்டிருந்த வேளையில், எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை முடிவால் தமிழக அரசியலின் போக்கே மாறியதாகக் கூறப்படுகிறது.

விஜய்-க்கு செக் வைக்க உதயநிதி போட்ட மாஸ்டர் பிளான்!

எந்தவொரு சூழலிலும் விஜய் மட்டும் முதல்வராகக் கூடாது என்பதில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் நேரடியாகவே களம் இறங்கினார். இதற்காக அதிமுகவுடன் கைகோர்க்கவும் அவர் தயாராக இருந்தார். ஆரம்பத்தில், “நான் தான் முதல்வர், எனக்கு ஆதரவு தாருங்கள்” என எடப்பாடி பழனிசாமி தரப்பில் திமுகவிடம் கேட்கப்பட்டது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டன. எடப்பாடிக்கு ஆதரவு அளித்தால் அது திமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களும் உதயநிதியிடம் தெரிவித்தனர்.

களம் புகுந்த ‘திருமாவளவன் முதல்வர்’ ஃபார்முலா!

இதனைத் தொடர்ந்து, திமுக மூத்த தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினிடம ஒரு மாற்று யோசனையை முன்வைத்தனர். விசிக தலைவர் தொல். திருமாவளவனை முதல்வராக முன்னிறுத்தி திமுக ஆதரவு கொடுத்தால், ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்கிய பெருமை திமுகவுக்குக் கிடைக்கும் என அவர்கள் கூற, உதயநிதியும் அதற்கு உடனே பச்சைக்கொடி காட்டினார்.

மேலும், திமுக வெளியில் இருந்து மட்டும் ஆதரவு தரும், அமைச்சரவையில் பங்கேற்காது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்குத் திருமாவளவனும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சம்மதம் தெரிவித்தனர். முதலில் திருமாவளவனை ஏற்க மறுத்த பாமக, தங்களுக்குச் சௌமியா அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. பேச்சுவார்த்தையில் இதற்கு உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, பாமகவும் இந்த ஃபார்முலாவிற்கு ஓகே சொன்னது.

டேபிளை தூக்கி அடித்த எடப்பாடி: சி.வி.சண்முகத்துடன் பயங்கர மோதல்!

இந்தத் திட்டத்தை அப்படியே எடுத்துக் கொண்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். “திமுக வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள். திருமாவளவன் முதல்வர், சௌமியா அன்புமணி துணை முதல்வர். நாம் (அதிமுக) அமைச்சரவையைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்” என்று சி.வி.சண்முகம் விவரித்துள்ளார்.

இதைக் கேட்டு கடும் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, “நான் கைகட்டி நிற்க வேண்டுமா? நான் முதல்வர் இல்லை என்றால் யாருக்கும் ஆதரவு இல்லை!” என்று ஆவேசமாகக் கத்தி, தனக்கு முன்னால் இருந்த டேபிளை தூக்கி அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் எடப்பாடி மற்றும் சி.வி.சண்முகம் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது. சி.வி.சண்முகம் எகிறியதால், சுற்றியிருந்தவர்கள் அவரைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

கைநழுவிய வாய்ப்பு: தவெக ஆட்சியில் திருமாவளவன்!

இந்த மோதலைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி “புதிதாக அமையும் ஆட்சிக்கு வாழ்த்துக்கள்” என எக்ஸ் (X) தளத்தில் பதிவு செய்து அதிரடியாக விலகினார். இதனால் கடைசி வரை காத்திருந்த திருமாவளவனுக்கு, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் முதல்வர் பதவி வாய்ப்பு நழுவிப் போனது. இதன் விளைவாக, அடுத்த கட்ட நகர்வாக தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்து, தற்பொழுது அந்த அமைச்சரவையில் திருமாவளவன் பங்கு பெற்றுள்ளார்.

அதிமுகவின் தற்போதைய நிலை என்ன?

எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடிக்காமல், திருமாவளவனை முதல்வராக்கச் சம்மதம் தெரிவித்து இருந்தால், அதிமுக தற்பொழுது அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும்; கட்சியும் உடைந்திருக்காது என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் தன்னிச்சையான முடிவால், இன்று அதிமுக என்கிற கட்சி தடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ