- Advertisement -
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் மாதம் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன படி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்.
மருத்துவர்களின் முழு பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ்
மேலும், கட்சியின் கொடி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கட்சியின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப மக்களை ஒன்றுபடுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு, முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.