ஒற்றுமையா இருந்தாலும் சண்டை மூட்டி விடுகிறார்கள் – ஹெச்.ராஜா புலம்பினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் காலை மாலை இரு வேளைகளிலும் பேசுகிறேன். அதையெல்லாம் உங்களிடம் கூற வேண்டுமா என்று செய்தியாளர் மீது பாஜக மாநில ஒருங்கிணைபாளர் எச்.ராஜா பாய்ந்தார்.
மேலும் கட்சியில் ஒற்றுமையாக இருந்தாலும் சண்டையை மூட்டி விட பார்கிறார்கள் என புலம்பினார்.
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில ஒருங்கிணைபாளர் எச்.ராஜா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தமிழக ஆளுநர் மெத்தபடித்தவர் பொதுவெளியில் பேசிய பேச்சுக்கு பல்வேறு அர்தங்களை கூறி வருகிறார்கள். அதேபோன்று யாரை மந்திரியாக்க வேண்டும் என்பது முதலமைச்சர் விருப்பம் அதில் நான் கருத்து சொல்ல முடியாது என்றார்.
மேலும் ஷேவாக் பதிவு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதை நான் பார்க்கவில்லை. என்ன நோக்கதில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எனக்கு தெரியவில்லை என்றார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என கேட்டத்தற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாநில அரசு திட்டம் அது முடியட்டும் அதன்பின்னர் அந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்றார்.
( நாடாளுமன்ற தேர்தல் முன்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய அரசு நிதியுடன் மெட்ரோ ரெயில் இரண்டாம் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியிருந்தார்)
மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்ற அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசுகிறிர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு காலை மாலை இரு வேளையிலும் பேசுகிறேன் அதை எல்லாம் உங்களுக்கு சொல்லுனுமா என ஆவேசமாக பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து எழுந்தபோது ஒற்றுமையா இருந்தாலும் சண்டையை மூட்டி விடுகிறார்கள் என கூறினார்.