ரூ.87.90 கோடி லட்சம் சி.விஜயபாஸ்கர் பெற்றுள்ளார் என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கூவத்தூரில் ரூபாய் 30.90 லட்சம் செலவு செய்துள்ளார் சி. விஜயபாஸ்கர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
2017 ஏப்ரலில் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்து பல கோடி ரூபாய் சம்பாதித்ததற்கான ஆவணங்களும் வருமானவரித்துறையிடம் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க, சி.விஜயபாஸ்கர் ரூ. 30.90 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
குவாரி மற்றும் குட்கா நிறுவனங்களிடம் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளனர்.
குவாரி நிறுவனங்களிடம் இருந்து ரூ.85.45 கோடியும், குட்கா நிறுவனங்களிடம் இருந்து ரூ.2.45 கோடியும் லஞ்சமாக விஜயபாஸ்கர் பெற்றுள்ளார் – வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
வங்கிகணக்குகள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கு எதிராக ஐகோர்ட்டில் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில் வருமானவரித்துறை பதில் தெரிவித்துள்ளனர்.