spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கரூர் சம்பவம்…உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது… ஹேம மாலினி அதிரடி!

கரூர் சம்பவம்…உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது… ஹேம மாலினி அதிரடி!

-

- Advertisement -

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹேம மாலினி தலைமையில் கரூரில் விசாரணை நடைபெற்றது.கரூர் சம்பவம்…உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது… ஹேம மாலினி அதிரடி!

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, மேலும் 110 பேர் காயமடைந்தனர். இதில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 59 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் நாட்டிலெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 8 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.

we-r-hiring

ஹேம மாலினி தலைமையில் விசாரணை தொடக்கம்,
அக்குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினி தலைமையேற்றாா். அக்குழுவில், அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிராஜ் லால், ஸ்ரீகாந்த் சிண்டே, அபிரஜிதா சாரங்கி, ரேகா சர்மா புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இணைந்து இன்று (செப்டம்பர் 30) கரூரில் நேரடி ஆய்வை மேற்கொண்டனர்.

விஜய் பரப்புரை நடந்த இடத்திலும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் குழுவினர் தரவுகளை சேகரித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹேம மாலினி, “கரூர் சம்பவம் இயற்கையாக நடந்ததாக தெரியவில்லை” என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

அரசியல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை,
கரூரில் துயரச் சம்பவத்தை பார்த்து விட்டு வந்தோம். அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது இல்லை. அங்குள்ளவர்கள் கூறிய தகவல்களையும் சேகரித்தோம். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் நலனையும் கேட்டறிந்தோம்” என அவர் தெரிவித்தார்

இயற்கை விபத்து போல் இல்லை,
மேலும், கரூரில் விஜய் பரப்புரைக்காக சிறிய இடம் கொடுத்தது சரியில்லை. முதலில் இருந்தே விஜய் பிரச்சாரத்துக்கு சரியான இடத்தை கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி விஜய்யின் பிரச்சார வாகனம் பெரியதாகவும் இருந்துள்ளது. மின்தடை திடீரென ஏற்பட்டுள்ளது. ஏதோ வித்தியாசமாக இருக்கிறது. இயற்கையாக நடந்தது போல் தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளாா்.

பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்”,
தொடர்ந்து பேசிய அவர், விஜய் பிரச்சாரத்தின் போது இத்தனை கூட்டம் கூடுவார்கள் என்று தெரிந்தும், பெரிய இடத்திற்கு அனுமதி வழங்கியிருந்தால் இது போன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்காது. இதனை தவிர்திருக்கலாம், எது நடந்தது என்பதை தெளிவாக அறியவே இங்கு வந்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

“இந்தச் சம்பவத்துக்கு யார் பொறுப்பு?”
மேலும் அவர், இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். வருத்தமாக இருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழுந்தைகள் என அனைவரும் தனது உயிரை விட்டுள்ளனர். கரூர் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. விரைவில் அவர்கள் குணமடைய வேண்டுகிறேன். ஆனால் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததற்கு யார் பொறுப்பு? இத்தகைய இடத்தில் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

சாலை விபத்தில் பொறியியல் மாணவர் பலி!! சோகத்திலும் நெகிழ வைத்த பெற்றோர்!!

MUST READ