spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு41 உயிர்கள் பலியான கரூர் துயரம்…தேசிய ஆணையம் நேரில் ஆய்வு…

41 உயிர்கள் பலியான கரூர் துயரம்…தேசிய ஆணையம் நேரில் ஆய்வு…

-

- Advertisement -

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.41 உயிர்கள் பலியான கரூர் துயரம்…தேசிய ஆணையம் நேரில் ஆய்வு…

கடந்த செப்.27-ம் தேதி கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகமானோர் உயிரிழந்த இந்தச் சம்பவம் இவ்வாண்டில் இந்திய அளவில் இடம்பெற்ற கூட்ட நெரிசல் நிகழ்வுகளிலேயே அதிக உயிர்ப்பலி ஏற்படுத்திய நிகழ்வாக உள்ளது. மேலும், இந்திய அரசியல் வரலாற்றில், அரசியல் கட்சியின் பிரச்சாரத்தில் இடம்பெற்ற மிகக் கடுமையான துயர சம்பவமாகவும் பதிவாகியுள்ளது.

we-r-hiring

இந்நிலையில், கரூரில் சம்பவம் நடந்த அன்று இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவரைத்  தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர், தமிழக காங்கிரஸ், இடதுசாரி தலைவர்கள், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அடங்கிள 8 பேர் கொண்ட குழு என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டனர். இந்த துயர சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட தவெக தரப்பை தவித்து பிற கட்சித் தலைவர்களும் சம்பவ இடத்துக்கும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் சென்று சந்தித்துவிட்டனர்.

இந்நிலையில், இந்த நிலையில், இன்று காலை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா கரூர் வேலுசாமிபுரம் சென்று, உயிரிழந்த சிறுவன் துருவ் விஷ்ணுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் நடந்தவற்றைப் பற்றியும் நேரில் விசாரித்தார்.

அதன் பிறகு, வடிவேல் நகரில் உயிரிழந்த காவலர் சுகுன்யாவின் வீட்டிலும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவர் ஏமூர் புதூர் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்க்கு மட்டும் தனி விமானம் எப்படி சாத்தியம்? – ஜெயராமன் திமுக கேள்வி

MUST READ