spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் துயர சம்பவம் மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது - விஜய்

கரூர் துயர சம்பவம் மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது – விஜய்

-

- Advertisement -

மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது என கரூர் துயர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டார்.கரூர் துயர சம்பவம் மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது - விஜய் வாழ்நாளில் இதுபோன்று ஒரு கடினமான சூழ்நிலையை நான் சந்தித்தது இல்லை. என் மீது வைத்துள்ள பாசத்தால் மக்கள் அதிகளவில் வந்துவிட்டார்கள். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்பதால் மக்களை சந்திக்க கரூக்கு நேரில் செல்லவில்லை. கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இறந்தவா்களின் குடும்பங்களுக்கும், உறவினா்களுக்கும் ஆறுதல் கூறுகிறேன் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன் என்றும் விஜய் கூறியுள்ளளா்.

தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவா்களுக்கு என் மீது விரோதம் இருந்தால் என்னை தண்டிக்கட்டும். நான் தாங்கிக் கொள்வேன். மக்கள் தாங்க மாட்டாா்கள். என் மக்களை விட்டுவிடுங்கள். த.வெ.க.வுக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் என் கேரக்டரில் அவர்தான் நடிக்க இருந்தார்…. அருண் விஜய் பேட்டி!

we-r-hiring

 

MUST READ