கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக என வி சி க தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி ‘உண்மை கண்டறியும் குழுவை’ அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.
இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது. எனவே, ராகுல் காந்தி அவர்கள், இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
விஜய் அரசியல் காலி! கரூரில் நடந்தது இதுதான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
