Homeசெய்திகள்அரசியல்"விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை": அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்

“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் அவரது தேர்தல் களம் குறித்து சென்னை வியாசர்பாடி புனித ஜோசப் ஆலயத்தில் அருட்தந்தை சார்லஸ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

சிறுபான்மையினர் வாக்கு வங்கி அரசியலா?

we-r-hiring

விஜய் பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்ததன் பின்னணியில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறும் நோக்கம் இருப்பதாக அருட்தந்தை குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்:

“பெரம்பூரில் விஜய் நின்றாலும் அவருக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. விஜய் பெயரளவில் மட்டும் கிறிஸ்தவராக இருந்தால் போதாது; அவரது செயல்பாடுகளும் வாழ்வியலும் ஒரு கிறிஸ்தவருக்குரிய நற்பண்புகளுடன் இருக்க வேண்டும். சிறுபான்மையினர் எப்போதும் மதச்சார்பற்ற கட்சிகளுக்கே ஆதரவு தருவார்கள்.”

மேலும், கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள் என்பதால், அவர்கள் வெறும் மதத்தைப் பார்த்து வாக்களிக்க மாட்டார்கள், பகுத்தாய்ந்துதான் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சினிமா உலகிலேயே அரசியல் செய்கிறார்”

விஜய்யின் அரசியல் முதிர்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய அவர், “விஜய் இதுவரை எந்தவொரு மக்கள் போராட்டங்களிலும் நேரடியாக ஈடுபட்டதில்லை. சொந்த குடும்பத்தையே சரியாகக் கையாள முடியாதவர், எப்படி தமிழ் மக்களைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்க முடியும்? அவர் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை, சினிமா பாணியிலேயே அரசியலை அணுகுகிறார்,” என விமர்சித்தார்.

மேலும், மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் துரோகம் இழைத்து வருவதாகக் குற்றம் சாட்டிய அருட்தந்தை, விஜய்க்கும் பாஜகவிற்கும் இடையே மறைமுகக் கூட்டணி இருப்பதாக வரும் செய்திகள் உண்மையாக இருக்கக்கூடும் என ஐயப்பாட்டை வெளிப்படுத்தினார்.

தமிழகத்தின் தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே சிறந்த ஆளுமையாகத் தெரிவதாக அவர் கூறினார்.”இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அவர் செய்துள்ள நலத்திட்டங்கள் மீண்டும் அவரை அரியணையில் ஏற்றும்.”ஒவ்வொரு ஆண்டும் வரி உயர்த்துவது குறித்து அரசு கவனமுடன் செயல்பட வேண்டும் என ஒரு கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

MUST READ