Homeசெய்திகள்அரசியல்ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பெற்றுத் தரும் நற்சான்று எது – அமைச்சா் விளக்கம் !

ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பெற்றுத் தரும் நற்சான்று எது – அமைச்சா் விளக்கம் !

-

- Advertisement -

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட 114 பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கேடயம் வழங்கி பாராட்டினார்.ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பேற்று தரும் நற்சான்று எது – அமைச்சா் விளக்கம் !

பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா சென்னை சாந்தோமில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு,  சென்னை மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், நரேஷ் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் விதம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட 114 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 2022 அக்.10ம் தேதி எனது தலைமையாசிரியரான முதலமைச்சரை  சந்தித்து அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று பள்ளிகளில் துறை ரீதியான  ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தேன். அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் 77 வகையான ஆய்வு மேற்கொண்டோம். இன்று முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் 234 வது தொகுதியாக எனது ஆய்வை முடித்திருக்கிறேன். எனது ஆய்வின் அறிக்கையை மாணவ செல்வங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன்.

பகவத் கீதையில் கை வைத்து பதவியேற்பு: அமெரிக்காவில் உளவுத்துறை இயக்குநராக ‘இந்து பெண்’

1955ல் ஜவகர்லால் நேருவை சந்தித்த லட்சுமி என்ற மாணவி, வெளிநாடுகளுக்கு தூதர்களை அனுப்புவது போல மாணவர்களை ஏன் அனுப்பக்கூடாது என கேட்டார், நேருவால் சிறந்த சிந்தனை என பாராட்டப்பட்ட இதனை நமது முதலமைச்சர் நிறைவேற்றுகிறார். இதுவரை சுமார் 200 மாணவர்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், தென்கொரியா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளோம். பெற்றோர் ஒருபோதும் நமது குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. சமூகத்தை பார்த்து மாணவர்கள் மீது சுமை ஏற்றாதீர்கள்.

நல்ல மதிப்பெண் என்பது அளவுகோல் அல்ல, சமூகத்தில் நல்ல மனிதன் என்பதே ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பெற்றுத்தரும் நற்சான்று. மாணவர்கள் எது செய்தாலும் உறுதியுடன் மேற்கொள்ளுங்கள். உங்களுக்காக இந்த அரசு இருக்கிறது. அமைச்சராக நான் இருப்பதாக தெரிவித்தார்.

MUST READ