Homeசெய்திகள்தமிழ்நாடுசீமானின் மேல்முறையீடு மனு தள்ளி வைப்பு - உச்சநீதிமன்றம்

சீமானின் மேல்முறையீடு மனு தள்ளி வைப்பு – உச்சநீதிமன்றம்

-

- Advertisement -

சீமானின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் உத்தரவிட்டு, ஜூலை 31-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.சீமானின் மேல்முறையீடு மனு தள்ளி வைப்பு - உச்சநீதிமன்றம்சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஐகோா்ட் உத்தரவுக்கும் தடை விதித்துள்ளது. சீமான் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இது தொடா்பாக, உச்ச நீதி மன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமா்வில் வழக்கு விசாரணை நடைப்பெற்றது. மேல்முறையீட்டு மனு தொடா்பாக பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. சீமானின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் உத்தரவிட்டு, ஜூலை 31-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு – உணவு பாதுகாப்புத்துறை

we-r-hiring

MUST READ