Homeசெய்திகள்தமிழ்நாடுசாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி - முதல்வரின் பேச்சு!

சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி – முதல்வரின் பேச்சு!

-

- Advertisement -

சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி என்றும் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து செயல்படும் ஆட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி - முதல்வரின் பேச்சு!உலக உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள்  எ.வ வேலு, சேகர்பாபு, நாசர், மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன், சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்          ஆ.ராசா, பி.டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலரும கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, வாழ்த்துரை வழங்கிய முதலமைச்சர், மே ஒன்றாம் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே தினமான இந்த நாளில் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். 1932 ஆண்டு  கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து தந்தவர் பெரியார்.  ரஷ்யா போன்ற பிற நாடுகளுக்கு சென்று விட்டு தமிழகம் திரும்பிய பெரியார் இனி அனைவரையும் தோழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறினார்.

8 மணி நேரம் வேலை என்ற உரிமையை வென்றதற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சிந்தனை சிற்பி சிங்காரவேலன் தலைமையில் சென்னையில் மே தினம் கொண்டாடப்பட்டது. உழைப்பவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அண்ணா சொன்னார். அதற்கேற்ற வகையில் 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்த உடனேயே மே ஒன்றாம் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக கொண்டு வந்தார். அதற்குப் பிறகு கலைஞர் அதனை சட்டமாக்கினார்.

திராவிட மாடல்  ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு ஆண்டுகளில், எத்தனையோ திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.  தொழிலாளர்களுக்கு என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒரு சில திட்டங்களை குறிப்பிடுகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் 28,87,381 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, 2,461 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். உணவு மற்றும் பிற பொருட்களை டெலிவரி செய்யும் தொழிலார்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கும் தனி நல வாரியத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின்  குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை அமர்ந்து பணிபுரிவது கட்டாயம் நம் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. காரல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைப்போம் என்று பேரவையில் அறிவித்துள்ளோம். விரைவில் அமையவுள்ளது.தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து செயல்படுவது போலவே தொழிலாளர்களின் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து, இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனாலும் அவர்களிடம் நான் முதலில் கேட்பது எத்தனை தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதுதான். பிரச்சனைகளை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் அப்படிதான் இந்த அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இது சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி இந்த நாடே சமத்துவபுரம் ஆக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியமாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் 5 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறோம். உங்களுக்காக உழைக்கும் திராவிடம் ஆடல் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.

முதலமைச்சரை விமர்சிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது – முத்தரசன் கருத்து!

 

MUST READ