குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ஆடல் பாடலுடன் சீர்வரிசை கொண்டு வந்து குறவ மக்கள் வழிபாடு செய்தனா்.தமிழ் கடவுள் முருகன் குறத்தி பெண்ணான வள்ளியை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் குன்றத்தூரில் குறிஞ்சி பெருமுக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன், குறிஞ்சி திருமுக பெருவிழா நடைபெற்றது. திருவள்ளி முருகனுக்கு வம்ச வழியினர் வழிபாடு சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது. குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் இருந்து குறவ மக்கள் சீர்வரிசையாக தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பறையிசை முழங்க ஆடல் பாடல் இசைத்தபடி சீர்வரிசைகளை தலையில் சுமந்த படி ஊர்வலமாக நடந்து சென்றனர்.
கொளுத்தும் வெயிலில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று குன்றத்தூரில் மலை குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் கோவிலில் சீர்வரிசையை கொண்டு சென்று சேர்த்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர், அங்கிருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி ஏராளமான காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஜல்லி, எம்.சாண்ட் விலை குறைப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -இராமதாஸ் வலியுறுத்தல்