தமிழ்நாட்டில் மே 6-ம் தேதி 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் அளித்துள்ளது.தமிழ்நாட்டில் மே 6-ம் தேதி 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்அதிகபட்சமாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னையில் இன்றும்,நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று எச்சரிக்கை ஏதுவுமில்லை. மேலும், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை. நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.