ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி தனது பாட்டி இந்திரா காந்திக்கும் தாய் சோனியா காந்திக்கும் செயல் நிலம் என்பதாலேயே அங்கு தாம் வேட்பாளராக கலம் இறங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.


ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இடையே உள்ள 100 ஆண்டு காலப் பினைப்பை தனது தாயும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது X பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றம் செய்துள்ளார். தாத்தா பெரோஸ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி உள்ளிட்டோரின் பழைய புகைப்பட ஆல்பத்தை சோனியா காந்தியும் ராகுலும் கண்டு உணர்வுப்பூர்வமாக உரையாடிய காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் ரேபரேலியும் அமேதியும் தங்களை பொருத்தமட்டில் வெறும் மக்களவைத் தொகுதிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விரு தொகுதிகளின் மூளை முடுக்கெல்லாம் தலைமுறைகளின் நினைவுகள் நிரம்பிக்கிடப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
रायबरेली और अमेठी हमारे लिए सिर्फ चुनाव क्षेत्र नहीं, हमारी कर्मभूमि है, जिसका कोना कोना पीढ़ियों की यादें संजोए हुए है।
मां के साथ पुरानी तस्वीरें देखकर पापा और दादी की याद भी आ गयी, जिनकी शुरू की गयी सेवा की परंपरा मैंने और मां ने आगे बढ़ाई।
प्रेम और विश्वास की बुनियाद पर… pic.twitter.com/9RKgGG8qjb
— Rahul Gandhi (@RahulGandhi) May 14, 2024
பெரோஸ் காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் 2004 ஆம் ஆண்டு முதல் சோனியா காந்தி போட்டியிட்டு வென்றார். இந்த முறை அவர் மக்களவைக்கு போட்டியிடாமல் மாநிலங்களவை உறுப்பினர் ஆனதால் தனது தாயின் தொகுதியில் ராகுல் போட்டியிட்டுள்ளார். அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்த ராகுல் இந்த முறை வயநாடுடன் ரேபரேலியும் தேர்வு செய்ததற்கு இந்த வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த மாதம் 20 ஆம் தேதி ரேபரேலியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு சோனியா ராகுல் உணர்வுப்பூர்வமாக உரையாடும் வீடியோ பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.


