Homeசெய்திகள்விளையாட்டுவெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? - கொல்கத்தாvsலக்னோ அணிகள் இன்று மோதல்!

வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? – கொல்கத்தாvsலக்னோ அணிகள் இன்று மோதல்!

-

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 28வது லீக் போட்டியில் கொல்கத்தாvsலக்னோ அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 27 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 28வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள 27வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 4 போட்டியில் 3 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி மூன்றையும் வெற்றி பெற்று ஆதிக்கம் பெற்றுள்ளது. இரு அணிகளும் கடந்த போட்டியில் தோல்வியடைந்ததுள்ளதால் இந்த போட்டியில் வெற்றியை பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டிக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

MUST READ