Homeசெய்திகள்விளையாட்டு'ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு'- அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?

‘ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு’- அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?

-

 

ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!
Photo: BCCI

ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் ‘பி.சி.சி.ஐ.’

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை- அமைச்சர் முத்துசாமி

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு. அதன்படி, இந்திய கிரிக்கெட் டி20 அணியில் ஜொலித்து வரும் திலக் வர்மாவுக்கு ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் கிடைத்துள்ளது. எனினும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு அணியில் வாய்ப்பில்லை.

காயத்தில் இருந்து மீண்ட கே.எல். ராகுல் அணிக்கு திரும்பினார். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, விராட் கோலி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்சர், ஷர்துல், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ