தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை- அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பார்கள் இயங்குவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பே சட்டவிரோத பார்கள் இருந்தன. அப்படி இருந்தால் நடவடிக்கையும் எடுக்க தயார். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி கற்பனை ரீதியில் புகார் கூறிகிறார். டாஸ்மாக் நிர்வாகத்தை முற்றிலும் கணினி மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிதாக ஒரு டாஸ்மாக் கடைகள் கூட திறக்கப்படவில்லை. கோவில், பள்ளிகளுக்கு அருகில் இருந்த கடைகள் இடம் மாற்றப்பட்டுள்ளன.
ஏறத்தாழ மொத்தமுள்ள 1045 குளங்களில் 920 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. சில குளங்களில் தண்ணீர் போதுமானது அல்ல. கடந்த 7 ஆண்டுகளாக திட்டமிடல் சரியாக இல்லாததால் சாலை அகலப்படுத்துதல் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.