- Advertisement -
தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு எட்டப்படாததால் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி, நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. அது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


