Homeசெய்திகள்தமிழ்நாடுஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே...

ஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பு…

-

- Advertisement -

மத்திய ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.ஈரான் போர் எதிரொலி – வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்…வீட்டு உபயோக சிலிண்டர் 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பு…உலகளாவில் அரசியல் சூழ்நிலைகள்(Geo-political situation), போர் பதற்றம் காரணமாக, உலகெங்கிலும் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு அருகில் உள்ள முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, உற்பத்தி செய்யப்படும் சமையல் எரிவாயு எல்பிஜி என்னும் பெட்ரோலிய வாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

இதனால் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 20 நாட்களுக்கு மட்டுமே வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரகள் கையிருப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளாா்.

இதனால் எல்.பி.ஜி (LPG) எரிவாயுவின் இருப்பு மற்றும் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாடு காரணமாக, தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான (Industrial & Commercial Customers) எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் (IndianOil) அறிவித்துள்ளது.

வணிக நிறுவனஙகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் தங்களின் நிறுவனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தற்போதைக்கு வேறு மாற்று எரிபொருட்களை ஏற்பாடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விநியோகம் சீரடைந்தவுடன் அதுகுறித்த தகவல் உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு:  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

MUST READ